Wednesday, December 16, 2009

காகம் ஒன்று வந்தது

காகம் ஒன்று வந்தது
கா கா என்றது

கிளிகள் இரண்டு வந்தன
கீ கீ என்றன

குயில்கள் மூன்று வந்தன
கூ கூ என்றன

சேவல் நான்கு வந்தன
கொக்கரக்கோ என்றன

அன்னம் ஐந்து வந்தன
அசைந்து அசைந்து நடந்தன

பருந்து ஆறு வந்தன
வட்டமிட்டு பறந்தன

கழுகு ஏழு வந்தன
கழுத்தை நீட்டி நின்றன

சிட்டு எட்டு வந்தன
எட்டி எட்டி பறந்தன

மயில்கள் ஒன்பது வந்தன
நடனம் ஆடி நின்றன

கொக்கு பத்து வந்தன
கூட்டமாக பறந்தன

4 comments:

saravan said...

சுட்டி கதைகளும் பாடல்களும்

அருமை // ரைம்ஸ் நீங்களே..

இயற்றியதா??

அமுதா said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி saravan. பாடல்கள் என் பெண் பள்ளியில் கற்று வந்தவை.

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

ஆஹா.. ஒன்னாம் கிளாஸ் புக்குல போடலாம் போல இருக்கே.. ரொம்ப லேட்டா வந்துருக்கேன்..

சுப்பர்...

நன்றி...

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

நான் மெகானிகல் என்ஜினீயர்... நீங்கள்...?