சின்ன சின்ன பொம்மை...
சின்ன சின்ன பொம்மையிது
சீருடைய பொம்மை
எனதருமை தாயாரும்
எனக்கு தந்த பொம்மை
சட்டையிட்டு, தொப்பியிட்டு
நிற்கும் இந்த பொம்மை
பொட்டும் வச்சி, பூவும் வச்சி
நிற்கும் இந்த பொம்மை
சாவிகொடுத்தால் ஓடும்
அது மணியடிச்சா தூங்கும்
நல்ல நல்ல நாட்டியங்கள்
அற்புதமாய் ஆடும்
அம்மாதந்த பொம்மையிது
சும்மா தரமாட்டேன்
சுற்றி சுற்றி வந்தாலுமே
சும்மா தரமாட்டேன்
Thursday, February 26, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
சின்ன சின்ன பொம்மை இது பாட்டை
ஒரு கிராமிய மெட்டில் இங்கே பாடியிருக்கிறேன்.
நான் முதியவன். குரல் வளம் கிடையாது.
இதே மெட்டில் குரல் வளம் உள்ளவர் பாடினால், கேட்க மிகவும் நன்றாக இருக்கும்.
சுப்பு ரத்தினம்.
http://ceebrospark.blogspot.com
Post a Comment