Thursday, May 7, 2009

ஒரு யானையின் கதை


இந்த கதை ஒருமுறை தொலைக்காட்சியில் ஒருவர் அழகாகக் கூறினார். என் மொழியில் அந்த கதை.

ஒரு கோயில்ல ஒரு யானை இருந்ததாம். யானை என்ன கலர்? ம். கருப்பு. அந்த யானை ரொம்ப அழகா இருக்குமாம். துதிக்கையை நீட்டி, காதை அசைச்சு, காலை தூக்கி கோயிலுக்கு வர்ற குழந்தைகளோட விளையாடுமாம். குழந்தைகளுக்கும் யானைனா ரொம்ப இஷ்டமாம். தினம் கோயிலுக்கு வந்து யானையோட விளையாடிட்டு போவாங்களாம்.

இந்த யானைக்கு ஒரே ஒரு வருத்தம், தான் கருப்பா இருக்கோம் அப்படீனு. குழந்தைகள் எல்லாம் பல வண்ணத்துல உடை உடுத்தி வர்றதைப் பார்க்கும். கிளியோட பச்சை நிறம், புறாவோட வெள்ளை நிறம், மயிலோட நீல நிறம், வாத்தோட மஞ்சள் நிறம், மாட்டோட ப்ழுப்பு நிறம்னு எல்லாரோட நிறத்தையும் பார்த்து தான் மட்டும் அப்படி இல்லையேனு ஏங்கும்.

ஒரு நாள் அது சாமிகிட்ட, "சாமி சாமி எனக்கு இந்த கருப்பு நிறம் பிடிக்கலை. வேற நிறம் தாங்க" அப்படீனு கேட்டுச்சு. உடனே சாமி, "உனக்கு என்ன நிறம் வேணும்னு கேட்டார்". அதுக்கு யானைக்கு என்ன நிறம் கேட்கறதுனு புரியலை. அது உடனே "எனக்கு எல்லா நிறமும் வேணும்" அப்படீனு கேட்டுச்சு. உடனே அது உடம்பு பூரா நிறைய வண்ணங்கள் வந்திடுச்சு. இப்ப யானை கருப்பா இல்லை, உடம்பு முழுசா பல வண்ணம் சிதறி இருந்தது.

மறுநாள் அது ஆவலோடு குழந்தைகளுக்காகக் காத்திருந்தது. குழந்தைகளும் ஆசையா யானையோட விளையாட ஓடி வந்தாங்க. ஆனால், அவங்க கருப்பு யானையைத் தேடுனாங்க, இந்த வண்ண யானையை இல்லை. இந்த யானையைப் பார்த்து பயந்து யாரும் கிட்ட வரலை. யானை எவ்வளவோ சொல்லி பார்த்துச்சு, ஆனால் குழந்தைகள் எல்லாம் பயந்து ஓடிட்டாங்க.

அப்ப தான் யானைக்கு ஒண்ணு புரிஞ்சுது. அவங்க தன்னை பழைய கருப்பு யானையா பார்த்தால் தான் ஆசையா விளையாட வருவாங்கனு. இனிமேல் நான் நானாவே இருக்கேன், மத்தவங்க மாதிரி ஆகணும்னு வேண்டாத வேலை செய்ய மாட்டேன் அப்படீனு சாமிட்ட சொல்லுச்சாம். உடனே அது பழைய யானை ஆகிடுச்சாம்.

மறுநாள் குழந்தைகள் எல்லாம் ஓடி வந்து அந்த யானையோட ஆசையா விளையாடினாங்களாம்.

4 comments:

இது நம்ம ஆளு said...

அக்கா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.

முக்கோணம் said...

நல்லா இருக்கு...இந்த கதையோட கருத்து என்னன்னு கொஞ்சம் சொல்லுங்க..

அமுதா said...

வருகைக்கு நன்றி முக்கோணம். கதையின் கருத்து
"இனிமேல் நான் நானாவே இருக்கேன், மத்தவங்க மாதிரி ஆகணும்னு வேண்டாத வேலை செய்ய மாட்டேன் " என்று யானை கூறுவது தான்

Unknown said...

நல்ல கதை.

மற்ற பதிவுகளும் படித்தேன், சுவாரசியம். இன்னும் கொஞ்ச நாள் கழித்து எங்க குட்டிநிலாவுக்கு நான் கதைச் சொல்ல, விளையாட உங்க பதிவுகள் உபயோகமா இருக்கும்.